What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Resister in Tamil:

மின்தடை (Resistor), மின்தடையி, அல்லது மின்தடையாக்கி என்பது மின்னோட்டத்தை எதிர்க்கும் ஒரு மின் உறுப்பு (resister) ஆகும். மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் பொழுது மின்தடை வெப்பம் ஆகிறது. மின்தடையானது, மின்னோட்டத்தைத் தடுக்க அல்லது நெறிப்படுத்த மின் சுற்றுக்களில், Electronics சாதனங்களில் பயன்படுகின்றது.

மின்தடை குறிஈடு:

Fixed resistor symbol
ANSI standard
Fixed resistor symbol
ஒருபொருள் மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் தடையானது மின்தடைமம் (resistance) என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் மின்தடைமம் அப்பொருளின் நீளம், (L) அப்பொருளின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, (A) மற்றும் அப்பொருளின் அடிப்படையான மின்தடைமை ஆகியவற்றை பொறுத்தது ஆகும். இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளான நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்தது. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு ஆகும்.
மின்சார வலையமைப்புகள், மின்னணுச் சுற்றமைப்புகள், தொகுப்புச் சுற்றுகள், பிற மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றில் ஓர் பிரிக்கவியலா அங்கமாய் மின்தடைகள் திகழ்கின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடைகள் சில சேர்மங்கள், படலங்கள், உயர் மின்தடை கொண்ட நிக்கல்-குரோம் (Ni-Cr) போன்ற உலோகக்கலவைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் தூய மின்தடைகளாக ஒருபோதும் செயல்படுவது இல்லை. இவை தொடரிணைப்பில் சிறிய அளவிலான மின்தூண்டமும் (inductor) பக்க இணைப்பில் சிறிய அளவிலான மின்தேக்குத்திறனும் (capacitor) கொண்டதாக உள்ளன. ஆனால் இது போன்ற விவரக்கூற்றுகள் உயர்-அதிர்வெண் (high frequency) கொண்ட பயன்பாடுகளில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.மின் தடையத்தில் காணப்படும் தேவையற்ற மின்தூண்டம், அளவிற்கு மீறிய இரைச்சல் , மின்தடை வெப்பநிலை எண்(temperature co-efficient of resistance) போன்றவை அம்மின்தடையங்கள் தயாரிக்கப்படுகின்ற விதத்தினைப் பொருத்தே அமைகின்றன.
தடையத்தின் வகைகள்
  1. மாறாத்தடை (fixed resistor)
மாறாத்தடை என்பது முன்பே அதன் மதிப்பு நிலையாக இருக்கும் படி அமைக்கப்பட்ட மின் தடை ஆகும். அதாவது இதன் வரையறுக்கப்பட்ட மதிப்பை நாம் மாற்றவோ, குறைக்கவோ முடியாது.
  1. மாறும்தடை (variac அல்லது variable resistor)
மாறும் தடை அல்லது variable resistor என்பதற்கு உதாரணமாக potentiometer மற்றும் Rheostat ஐ சொல்லலாம். அதவாது இந்த வகையிலான மின் தடையத்தின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக பழைய வானொலி, மற்றும் தொலைக்காட்சிகளில் volume ஐ control செய்ய மிகவும் பயன்படுத்தப்பட்டது.
  1. ஒளி உணரித்தடை (light dependent resistor)
மின் தடையத்தில் ஒளியைப் பொறுத்து மின் தடையத்தின் மதிப்பு (Resistance value) அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஆனால், அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடு வரையில் தான் செய்யமுடியும் .
  1. முற்றுணிந்ததடை (preset resistor)
முற்றுணிந்ததடை என்பது மின் தடையகத்தின் ஒரு வகை தான். இதனை மிகச் சிறிய PCB Board களில் பார்க்கலாம். அத்துடன் இதன் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக : தெருவோரத்தில் வாங்கப்படும் pocket size Radio களின் circuit board இல் volume ஐ மாற்றி அமைக்கபயன்படும்
  1. வெப்பத்தடை (thermistor)
மின் தடையங்களில் வெப்பத்தை பொறுத்து இதன் மதிப்பு அதுவாகக் குறையும் அல்லது அதிகரிக்கும். பொதுவாக, fire alarm களில் இது மிகவும் பயன் படுகிறது. ஓமின் விதிப்படி மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தை இவ்வாறும் கணக்கிடலாம் :- மின் தடைமம் (R), மின் அழுத்தம் (V), மின்னோட்டம் (I) ஆயின்,
R= V/I
Video Explanation, What is Resister in Tamil:


Comments

Popular posts from this blog

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?

What is Electron in Tamil