What is Capacitor in Tamil மின்தேக்கி என்றால் என்ன?

what is Capacitor in Tamil: மின்தேக்கி என்றால் என்ன?

மின்தேக்கி என்பது மின்சாரத்தை அதாவது மின் ஆற்றலை சேமித்து வைக்க உதவும் device. இது மின்ஆற்றலை electrostatic field அக சேமித்து வைக்கிறது. இது ஒரு, இரு முனை equipment ஆகும். It is a two terminal device. இரண்டு மின்கடத்திகளை ஒரு மின்காப்புப் பொருள் கொண்டு பிரித்தால் அது ஒரு மின்தேக்கியாகச் செயல்படும். மின்பகுளி-மின்தேக்கி (Electrolytic Capacitor) மற்றும் சுட்டாங்கல்-மின்தேக்கி (Ceramic Capacitor) ஆகியவை பொதுவாக மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின்தேக்கிகளாகும். தற்காலத்தில் நெகிழி-மின்தேக்கியின் (Plastic Capacitor) பயனும் அதிகரித்து வருகிறது.
Capacitor:
Q => Charge
E => Electric field
Image result for what is capacitor
Dielectric => மின்காப்பன்
இரண்டு மின்கடதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். (ஒன்றை postive plates என்றும் மற்றொன்றை negative plates என்றும்). அதனை ஒரு மின்காப்பன்கள் மூலம் பிரித்து வையுங்கள். இப்போது அதன் இடையே ஓர் மின்னழுத்தம் கொடுங்கள். இப்போது அந்த மின்னழுத்ததை எடுத்து விடுங்கள்.  இப்போது அந்த மின்கடதிகளுக்கு இடையே ஒரு மின்னழுத்தம் நிலவும். அதுவே capacitor voltage என்று அழைக்கப்படுகின்றது.. இது எவ்வாறு நடகின்றது என்று பார்ப்போம்..
நாம் இந்த இரண்டு கடதிகளுக்கு இடையே ஒரு மின்னழுத்ததை கொடுப்பதால் இந்த கடத்திகளுக்கு இடையே ஒரு மின்புலம் ஏற்படுகிறது (In other words, the electrostatic field established between the plates). இந்த மின்னழுத்தம் உள்ளே இருக்கும்’ மின்னூடத்தை இயக்குகிறது. இதனால் மின்னோடம் ஒரு முன்னிலையில் இருந்து மற்றொரு முனைக்கு பாய்கிறது. இதில் positive plates மின்னூட்டத்தின் அளவு எப்போதும் negative plate இன் அளவிருக்கு சமமாக தான் இருக்கும். இந்த எதிர் மின்னூட்டம் பெற்ற இரு plates மூலம் மின்னழுத்தம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த மின்னழுத்தம் நாம் apply செய்யம் மின்னழுத்ததிற்கு சமம் எனில் அது முழுவதும் charged என்று அழைக்கப்படுகிறது.
Vc என்பது capacitorக்கு இடையே உள்ள மின்னழுத்தம் என்றும், V என்பது நாம் apply செய்யும் மின்னழுத்தம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
V=Vc => Capacitor said to be fully charged.
மின்தேக்கியின் மின்தேக்கு திறன் capacitance என்று அழைக்கப்படுகிறது.
மின்தேக்கு திறன்:
ஒரு capacitorஇல் உள்ள chargeக்கும் அதற்கு இடையே apply செய்த voltageக்கும் இடைப்பட்ட விகிதமே மின்தேக்குதிறன் ஆகும்.
இது C என்கின்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
C=Q/V
capacitance இன் அலகு Farad ஆகும். ஒரு farad என்பது மிகப்பெரிய அளவு ஆகும். நாம் மைக்ரோ farad அல்லது nano farad இல் பயன்படுத்துகிறோம்.
1 micro farad= 1 * 10 ^ -6 Farad
1 Nano farad = 1* 10^ -9 Farad.
Types of capacitor in Tamil: Video Explanation:
What is Capacitor In Tamil: part-1
What is Capacitor in Tamil: part-2

Comments

Popular posts from this blog

What is Columb in Tamil கூலும் என்றால் என்ன?

What is Resister in Tamil | மின்தடை என்றால் என்ன?

What is Electron in Tamil